ரஜினிகாந்த் முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்று ஆய்வு செய்யப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் முறையான இ-பாஸ் பெற்றாரா? என ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்று ஆய்வு செய்யப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: July 22, 2020, 12:58 PM IST
  • Share this:
‘தர்பார்’ படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக மட்டுமே வெளியில் தலை காட்டினார்.


இந்நிலையில், முதல்முறையாக நேற்று முன் தினம் மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.




படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைபடிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா


படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்








கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காக சென்றுள்ளார். சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading