யாரெல்லாம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

யாரெல்லாம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம் நிலவிய சூழலில், சென்னை மாநகராட்சி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

யாரெல்லாம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், முடிவுகள் நெகட்டிவ் என வந்து அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாறுபட்ட அறிவிப்புகள் வெளிவந்தன.

இதனால், யாரெல்லாம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அணையர் பிரகாஷ் இதுதொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் புதிய நடைமுறைப்படி, அவர்கள் வழக்கம் போல் அவரது பணியை, தனிமனித இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்தும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... விருதுநகரில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு அனைத்து ஸ்கிரீனிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவமனையிலோ, பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading