டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

டெங்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்
மாதிரி படம்
  • Share this:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் பரவத்தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு மழை காலத்திலும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்ன? அதை தடுக்க வேண்டிய முறைகள் என்ன? என்பது குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெங்கு அறிகுறிகள் என்ன?


கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி, தோல் தடிப்புகள், கண் வலி, கடுமையான தலை வலி, ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தண்ணீர் தேக்க தொட்டிகள் அனைத்தையும் கொசு புகா வண்ணம் இறுக்கமாக மூடி வைக்கவேண்டும் . வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காத வண்ணம்  தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Also read... ஒரு கோடி பக்தர்கள்... ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம்...! கொரோனாவால் திருப்பதிக்கு ஏற்பட்ட இழப்பு

குளிர்சாதனப் பெட்டியின் கீழ்தட்டு, விண்டோ ஏசி பொருத்தப்பட்டுள்ள பிளேட், குளிரூட்டிகள் போன்றவற்றில் சேரும் தண்ணீரை வாரம் இருமுறை அகற்றவேண்டும்  எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் வந்தால் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உபயோகப்படுத்தக்கூடாது.

மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்ற சித்த மருத்துவத்தை பயன்படுத்தலாம் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading