சென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கத்தில் 300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
கோப்புப் படம்
  • Share this:
ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மே 22-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 786 தொற்றுகளில், சென்னையில் 569  பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 9,364 பேரில், 3791 பேர் குணமடைந்துள்ளனர்.  66 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் 74 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 69 பேரும்,  கோடம்பாக்கம் 69 பேரும், அண்ணாநகரில் 64 பேரும், தண்டையார்பேட்டையில் 58 பேரும், திரு.வி.க.நகரில் 47 பேரும்,  வளசரவாக்கத்தில் 45 பேரும், அடையாறு 41 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல், அம்பத்தூரில் 26 பேரும், பெருங்குடியில் 25 பேரும், திருவொற்றியூரில் 23 பேரும், சோழிங்கநல்லூரில் 18 பேரும், மாதவரத்தில் 6 பேரும், ஆலந்தூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மணலியில் புதிதாக நேற்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 1,768கோடம்பாக்கம் 1,300

திரு.வி.க.நகர் 1,079

தேனாம்பேட்டை 1000

தண்டையார்பேட்டை 881

அண்ணா நகர் 783

வளசரவாக்கம் 650

அடையாறு 513

அம்பத்தூர் 402

திருவொற்றியூர் 205

மாதவரம் 192

சோழிங்கநல்லூர் 148

பெருங்குடி 137

மணலி 115

ஆலந்தூர் 100

ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையிலும் தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.

அதேபோல், அடையாறு, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலத்திலும் கணிசமாக தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.28 சதவீதம் ஆண்கள், 39.70 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வயது வாரியாக பார்த்தால், ஆண்கள்- 30-39 வயதுக்கு உட்பட்ட 1263 பேரும், 20-29 வயதுக்கு உட்பட்ட 1233 பேரும்  பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல், பெண்கள்- 20-29 வயதுக்கு உட்பட்ட 810 பேரும், 30-39 வயதுக்கு உட்பட்ட 760 பேரும் பாதிக்கபட்டுள்ளனர் .

கடந்த 7 நாட்களில் (மே 16- மே 22), ராயபுரத்தில் 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கத்தில் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலம் மே 16 - மே 22:

ராயபுரம் 1112 - 1768

கோடம்பாக்கம்973 - 1300

திரு.வி.க.நகர் 750 - 1079

தேனாம்பேட்டை1000 - 669

தண்டையார்பேட்881 - 528

அதேபோல், சென்னையில் ஒரே வாரத்தில் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading