சென்னையில் இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் கொரோனா... ஆறுதல் அளிக்கும் மருத்துவமனை தகவல்

சென்னையில் இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் கொரோனா... ஆறுதல் அளிக்கும் மருத்துவமனை தகவல்

கோப்பு படம்

சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் 12.000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருப்பது ஆறுதலாக உள்ளது. 

 • Share this:
  சென்னையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழப்பாக்கம், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியுட் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 4368 படுக்கைகள் உள்ளன. இதில், 2933 பேர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், 1435 படுக்கைகள் காலியாக உள்ளன.

  தீவிர சிகிச்சை தேவைப்படாத, ஆனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழலில் இருக்கும் நோயாளிகளுக்கு என சென்னையில் கே.கே. நகர், தண்டையார்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட 11 இடங்களில் சிறிய மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஆயிரத்து 800 படுக்கைகள் உள்ளன. அதில், 795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1005 படுக்கைகள் காலியாக உள்ளன.

  இவை தவிர கல்லூரி வளாகங்கள் பல கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகளுடன் இருக்கும் இளவயதினர் இந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

  அதன்படி, சென்னை ஐஐடி அண்ணா பல்கலைக்கழகம், விக்டோரியா விடுதி உள்ளிட்ட 14 பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 11645 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 1482 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10.256 படுக்கைகள் காலியாக உள்ளன.

  தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. குறிப்பாக 36 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் 25,987 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், 8,369 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மேலும், 17,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.  சென்னையில் 10,568 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், 3671 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1897 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

  கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணார் பல்ராம் பார்கவ் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், தமிழகத்தில் தொற்றால் பாதிப்பவர்களில் பெரும்பாலானோரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
  Published by:Vijay R
  First published: