கொரோனா பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் மரணம்

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுத்துறை  தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 • Share this:
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுத்துறை  தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,652 ஆக உள்ளது. சென்னையின் நேற்றைய தொற்று 3,719 ஆக அதிகரித்துள்ளது. இந்த இரண்டாவது அலையில் இதுவரை கண்டறியப் படாத அறிகுறிகளுடன் வருவோருக்கும் கொரோனா இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

  இரண்டாவது அலை கொரோனா வீரியமாக இருப்பதால் வெளியே செல்லும் போது குறைந்தது 3 முகக்கவசங்களாவது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

  சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார்.

  கடந்த 13ஆம் தேதி வயிற்று வலிக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் (14.04.21) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்படவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஏப்.21 அன்று பகல் நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில் இன்று காலை 5.35 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கருணாநிதியின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  Published by:Muthukumar
  First published: