Home /News /tamil-nadu /

தொடர்ந்து அதிகரிப்பு- சென்னையில் 300-யை நெருங்கிய கொரோனா பாதிப்பு

தொடர்ந்து அதிகரிப்பு- சென்னையில் 300-யை நெருங்கிய கொரோனா பாதிப்பு

கொரோனா

கொரோனா

சென்னையில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 300-யை நெருங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

    இன்றைய தமிழ்நாடு கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இன்று ஒரே நாளில் 15,742 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,59,586 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 208 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது கொரோனா பாதித்து 2,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், கோயம்புத்தூரில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona positive

    அடுத்த செய்தி