தேனாம்பேட்டையில் 7 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்

ராயபுரத்தை தொடர்ந்து தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

தேனாம்பேட்டையில் 7 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் அன்றாடம் கண்டறியப்படும் தொற்றுகளின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இதில், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்போர், குணமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கையை தனித்தனியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 62,598 பேரில் 38,947 பேர் குணமடைந்துள்ளனர். 22,686 பேர் சிகிச்சையில் உள்ளனர். 964 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கு அடுத்த அண்ணா நகர் மண்டலத்தில் 2,317 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 2,239 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

திருவெற்றியூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு சதவிகிதம் 2.30 ஆக உள்ளது.


இதற்கு அடுத்தபடியாக, தேனாம்பேட்டையில் உயிரிழப்பு 2.08 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ள ராயபுரத்தில் குணமடைந்தோர் சதவிகிதமாகம் 72 ஆகவும், தண்டையார்பேட்டையில் 71 சதவிகிதமாகவும், தேனாம்பேட்டையில் 70 சதவிகிதமகாவும் உள்ளது.

மண்டல  வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

திருவொற்றியூர்  2480மணலி- 1116

மாதவரம்- 2027

தண்டையார்பேட்டை- 6941

ராயபுரம்- 8506

திரு.வி.க.நகர்- 5143

அம்பத்தூர்- 2798

அண்ணா நகர்- 6843

தேனாம்பேட்டை- 7017

கோடம்பாக்கம்- 6731

வளசரவாக்கம்- 2890

ஆலந்தூர்- 1622

அடையாறு- 3840

பெருங்குடி 1630

சோழிங்கநல்லூர்- 1256

 

அதிகபட்சமாக ஒரே நாளில், கோடம்பாக்கத்தில் 260 பேருக்கும், தேனாம்பேட்டையில் 239 பேருக்கும், அண்ணா நகரில் 230 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read...  சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...

அதேபோல், தண்டையார்பேட்டையில் 153 பேருக்கும், திருவொற்றியூரில் 151 பேருக்கும், ராயபுரத்தில் 145 பேருக்கு, அடையாறில் 145 பேருக்கும், வளசரவாக்கத்தில் 135 பேருக்கும், திரு.வி.க.நகரில் 134 பேருக்கும், ஆலந்தூரில் 99 பேருக்கும், பெருங்குடியில் 64 பேருக்கும், மாதவரத்தில் 56 பேருக்கும்,  அம்பத்தூரில் 29 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 26 பேருக்கும், மணலியில் 25 பேருக்கும், அம்பத்தூரில் 10 பேருக்கும், தொற்று ஏற்பட்டுள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading