இப்படியும் ஒரு திருடன்: 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடியவர் கைது!

மாதிரிப் படம்

காலை நேரங்களில் கேபிள் ஆபரேட்டரை போல வரக்கூடிய நபர் ஒருவர், வீட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி சிலிண்டர்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னையில் தொடர்ச்சியாக சிலிண்டர்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், அசோக் நகர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வைத்திருக்கும் சிலிண்டர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காலை நேரங்களில் கேபிள் ஆபரேட்டரை போல வரக்கூடிய நபர் ஒருவர், வீட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி சிலிண்டர்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து சிலிண்டர் திருடனை பிடிக்க எம்.ஜி.ஆர். நகர் போலீசார் தனிப்படை அமைத்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடிய அசோக் குமார், அவற்றை  அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

  விசாரணையைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும், இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: