நடிகர் ஜெயம் ரவியின் உதவியாளர் மீது போலீசில் புகார்!

நடிகர் ஜெயம் ரவியின் உதவியாளர் மீது போலீசில் புகார்!
ஜெயம் ரவி
  • News18
  • Last Updated: September 27, 2019, 1:17 PM IST
  • Share this:
நடிகர் ஜெயம் ரவிக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஜெயம் ரவியின் உதவியாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் டாப் கார்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி என்ற பாதுகாவலர் கம்பெனியை ஓய்வு பெற்ற முன்னாள் உதவி ஆணையர் ரகுராம் நடத்திவருகிறார்.

இந்த நிறுவனத்தின் மேனேஜர் வின்சென்ட் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் நடிகர் ஜெயம்ரவிக்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அளித்து வந்தனர்


இரண்டு நபர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாகவும், இரண்டு பாதுகாலர்களில் ஒருவரை தன்னிச்சையாக அவர்களே தங்களது சொந்த பாதுகாவலராக தங்களது நிறுவனத்திற்கு தெரியாமல் எடுத்துக் கொண்டதாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் ஜெயம் ரவியின் நேர்முக உதவியாளர் சேஷாகிரி மீது புகார் அளித்துள்ளார்.

4 வது மாத இறுதியில் பாதுகாவலர்கள் இரவில் தூங்கியாத குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு 4 மாத சம்பளம் பிடித்தம் செய்துள்ளனர். பின்னர் அந்த பாதுகாவலர்களிடம் தனியாக வந்து பாதுகாவலர்களாக சேர்ந்துகொண்டால் கூடுதல் சம்பளத்தோடு வேலையில் அமர்த்திக்கொள்கிறோம் என ஜெயம் ரவி உதவியாளர் கூறியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading