சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

”சென்னையின் நில அமைப்பு இயற்கையாகவே குறைந்த மழை நீரை மட்டும் சேமிக்கும் திறன் கொண்டுள்ளது”

சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:52 PM IST
  • Share this:
சென்னையில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரித்துள்ளார்.

சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் சேகரிப்புத் திட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழையால் சென்னைக்கு 20 சதவீதம் மழை மட்டுமே கிடைக்கிறது எனவும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சென்னையின் நில அமைப்பு இயற்கையாகவே குறைந்த மழை நீரை மட்டும் சேமிக்கும் திறன் கொண்டு இருப்பதாக கூறிய பிரகாஷ், மொத்தம் உள்ள 200 வார்டுகளில், குடியிருப்பு, வணிக வளாகம் என 12 லட்சத்து 72,000 கட்டுமானங்கள் இருப்பதாக தெரிவித்தார்.


சென்னையில் வார்டுக்கு 1000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் வீதம் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பான ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வார்டுக்கு ஒரு குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதையடுத்து 150 குளங்களில் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Also see...தண்ணீரின்றி தவிக்கும் சிட்லப்பாக்கம் மக்கள்: காசு கொடுத்தும் குகாதாரமற்ற நீர்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading