ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண்கள் பாதுகாப்புச் செயலியை குறைவானவர்களே பதிவிறக்கம் செய்துள்ளனர்! காவல் ஆணையாளர் வருத்தம்

பெண்கள் பாதுகாப்புச் செயலியை குறைவானவர்களே பதிவிறக்கம் செய்துள்ளனர்! காவல் ஆணையாளர் வருத்தம்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் அறிமுகப்படுத்திய காவலன் செயலியை குறைவான அளவிலேயே பெண்கள் பதிவிறக்கம் செய்தி்ருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.

  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், ஆலோசனை கூடத்தில் பெண்களின் பாதுகாப்பபுக்காக உருவாக்கப்பட்ட Kavalan SOS செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

  சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று மருத்துவக்கல்லூரி மாணவிகள், அரசு செவிலியர்களுக்கு காவலன் SoS செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் கபில்குமார் சி.சராட்கர், துணை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி மற்றும் அரசு மருத்துவர்கள் பங்கேற்றனர்.

  சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் "காவலன் எஸ்ஓஎஸ்" செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சென்னை மாவட்ட காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், ’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் குறைவு என்றார். பெண்கள் பாதுகாப்புக்கு காவலன் செயலி மிகச் சிறந்ததென கூறிய ஆணையர் விஸ்வநாதன், செயலி அறிமுகப்படுத்திய நாளில் இருந்து முதல் 5 நாள்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரே பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், அது மிகவும் குறைவு என்றும் வருத்தத்துடன் கூறினார். அந்த செயலி குறித்து பெண்கள் மட்டுமின்றி அனைவரிடமும் போலீசாரும், மாணவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் சென்னையில் குறைவு எனக் கூறிய ஆணையர் அதற்காக போலீசார் பணியில் ஓய்ந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்,

  5-ம்தேதி முதல் 9-ம்தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது இன்னும் பல மடங்கு உயர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் வழக்கு குறைவாக உள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை.

  இந்த புள்ளி விவரம் நம்மை திருப்தி படுத்தக்கூடாது. பெண்களுக்கு எதிரான எந்த வன்முறையும் இங்கு இல்லை என்பது வந்தால் தான் நல்ல சமூகம். அந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான மிக முக்கியமான குற்றம் நகைபறிப்பு சம்பவம். அது சென்னையில் 50 சதவீதம் குறைந்துள்ளது.

  இந்தியாவிலேயே அதிக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது தமிழ்நாடு தான். பெண்களுக்கு மற்றவர்களுக்கும் இந்த செயலி குறித்து அனைவரும் தெரிவியுங்கள். சமூகவலை தளத்தை கவனமாக கையாள வேண்டும்" என்றார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Women safety