ராயபுரம், தண்டையார்பேட்டையில் களமிறங்கிய கமேண்டோ படை... புதிய வியூகம் என்ன?

தமிழகத்திலையே அதிகம் கொரோனா தொற்று கொண்ட ராயபுரம் ,தண்டையார் பேட்டை பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமா கமேண்டோ படை? புதிய வியூகம் என்ன?

ராயபுரம், தண்டையார்பேட்டையில் களமிறங்கிய கமேண்டோ படை... புதிய வியூகம் என்ன?
கமண்டோ படை
  • Share this:
தேர்தல் நேரங்களிலும், பதட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் நாம் பார்க்கும் காவல்துறையின் கமாண்டோ பிரிவு வீரர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தற்போது வட சென்னை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

காவல்துறை, மாநகராட்சி என முழு வீச்சில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்ட்டாலும் கடந்த மூன்று மாதமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத பகுதியாக உள்ளது சென்னையின் ராயபுரம் ,தண்டையார் பேட்டை மண்டலங்கள்.

ராயபுரத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி 64 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வெறும் 20 பேருக்கு தொற்று இருந்த நிலையில் இன்று 5 ஆயிரத்து 500 ஐ தாண்டிவிட்டது.


சென்னை மாநகராட்சியில் இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் 12,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது கடந்த மூன்று மாதமாக இந்த இரண்டு பகுதிகளுக்கு மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட IAS, IPS அதிகாரிகள், 3000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், மைக்ரோ நிலை திட்டங்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அதனால் காக்கா தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று குறைந்தாலும் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பரவலாக எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதற்கு மக்கள் அடர்த்தியும் ஒரு காரணம் என்பதால் பெரும்பாலானோரை அருகே உள்ள கொரோனா கேர் சென்டர்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, வீடு வீடாக சென்று நாள் தோரும் காய்ச்சல் சோதனை மற்றும் கபசுர குடிநீர் விநியோகம் என சென்னை மாநகராட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன் அடுத்த கட்டமாக காவல்துறையின் கமாண்டோ பிரிவு களத்தில் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரிவாக உள்ள கமாண்டோ வீரர்கள் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து சென்று மக்கள் தேவையின்றி நடமாடுகிறார்களா என கண்காணிப்பார்கள். உரிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இத்தகைய கடுமையான நடவடிக்கையால் இருபது நாட்களில் தொற்று எண்ணிக்கையை இந்த பகுதிகளில் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading