மீண்டும் தொடங்கிய ரூட்டு தல பிரச்னை... ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்!

Web Desk | news18
Updated: September 19, 2019, 5:57 PM IST
மீண்டும் தொடங்கிய ரூட்டு தல பிரச்னை... ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்!
Web Desk | news18
Updated: September 19, 2019, 5:57 PM IST
சென்னையில் ரூட் தல பிரச்னை காரணமாக ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதல் காட்சி இதுதான். கடந்த ஜூலை 23-ம் தேதி பச்சையப்பன் கல்லூரியின் இரண்டு ரூட் மாணவர்களில், ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் வெட்டினர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதை அடுத்து அந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். ரூட் தலைகளின் பட்டியலை எடுத்த போலீசார், இனிமேல் மோதலில் ஈடுபடமாட்டோம் என ரூட் தலைகளிடம் பிராமண பத்திரம் எழுதி வாங்கினர்.


மோதலில் ஈடுபட்டால் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக கருதப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கழிவறையில் வழுக்கி விழுந்து கைகளையும் உடைத்துக் கொண்டனர்.

Also read... Chennai Power Cut | சென்னையில் ஆர்.ஏ.புரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (20-09-2019) மின்தடை!

கையில் கட்டுடன் மாணவர்கள் புகைப்படம் வெளிவந்த பின் மற்ற கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்னையில் ஈடுபடாமல் ஒழுங்காக கல்லூரிக்கு சென்று திரும்பி வந்தனர். அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளும் இடையூறு இல்லாமல் பயணித்து வந்தனர்.

Loading...

இந்நிலையில், மீண்டும் மாணவர்கள் தங்களின் சேட்டையை தொடங்கியுள்ளனர். புதன்கிழமை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட ரூட்டில் இருந்து ரயிலில் வரும் மாணவர்களுக்கும், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட ரூட்டில் வரும் மாணவர்களுக்கும் இடையே ரயிலில் வந்து போகும் போது தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த பிரச்னை காரணமாகவே புதன்கிழமை மோதல் சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோதலில் ஈடுபட்ட 9 மாணவர்களை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமினில் விடுவித்தனர்.

பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில், ரயில்நிலையங்களில் மோதி கொள்ளும் இந்த ரூட் தலைகளை தொடர்ந்து கண்காணித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see...

First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...