ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடி தோல்வி - சென்னை மாணவர் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடி தோல்வி - சென்னை மாணவர் தற்கொலை
தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவன்
  • News18
  • Last Updated: July 27, 2020, 3:06 PM IST
  • Share this:
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார். காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரி விடுமுறை என்பதால், தனக்கு பிடித்த டாட்டூ போடும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிதிஷ்குமார், இன்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கடையின் உரிமையாளரை கேட்டுள்ளனர்.

நிதிஷ்குமாரின் வாகனம் கடையின் வாசலில் இருப்பதால் தொடர்ந்து கடையின் கதவை தட்டியும்  திறக்க வில்லை. இதனையடுத்து மற்றொரு சாவியை வைத்து திறந்து பார்க்கும் பொழுது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


அவரது கையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். அதில் தான் ஆன்லைன் கேம்கள் விளையாண்டதாகவும், தன் சேமிப்பு பணத்தை அனைத்தையும் இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடி தோற்றதாகவும் நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற வெறியில் வேலை பார்த்த கடையில் உள்ள பணத்தை வைத்து கேஸ்ட்ரோ க்ளப் என்ற ஆன்லைனில் விளையாடியுள்ளார்.

Also read... தாயின் கள்ளக்காதலனை ஓடஓட விரட்டி கொலை செய்த மகன் - சென்னையில் பயங்கரம்அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தான் தற்கொலை செய்து கொள்வது தவறு எனவும், தனது பெற்றோர்கள், நண்பர்கள் காதலி ஆகியோர் எல்லோருக்கும் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading