கழிவுநீரை மறுசுழற்சி செய்தால் மட்டுமே அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி - முதலமைச்சர் பழனிசாமி

ஜெர்மனி நிதி நிறுவனத்தின் உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் நெம்மேலியில் அமையும் 2-வது நிலையத்தால் தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரை கூடுதலாக பெற முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கழிவுநீரை மறுசுழற்சி செய்தால் மட்டுமே அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி - முதலமைச்சர் பழனிசாமி
கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
நீரை மறுசுழற்சி செய்ய வசதி செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த நெம்மேலியில் ஏற்கனவே 100 மில்லியின் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையத்திற்கு அருகே  தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.       1259 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள இத்திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.


இதைத் தொடர்ந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமையும் இடத்தை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, இந்த திட்டத்துக்கான கட்டுமானப்பணி குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, நெம்மேலியைப் போல பேரூரிலும் 6,000 கோடி ரூபாயில், ஜப்பான் நாட்டு நிறுவன நிதியுதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் இரண்டு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.பெரிய பெரிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட தண்ணீர் பயன்பாடு அதிக அளவில் உள்ள இடங்களில் நீரை மறுசுழற்சி செய்தாலே 50 சதவீத பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், பென்ஜமின் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

ஜெர்மனி நிதி நிறுவனத்தின் உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் நெம்மேலியில் அமையும் 2-வது நிலையத்தால் தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரை கூடுதலாக பெற முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 12 இடங்களில் வசிக்கும் மக்களும், ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்தவர்கள் என சுமார் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also watch: ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து… தாம்பரத்தில் குடும்பமே மூச்சுத்திணறி உயிரிழந்த பயங்கரம்
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading