ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி (நாளை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

    அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும், அதை ஒத்திவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையான நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்கிடையில் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னையிலுள்ள உரிமையில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உறுப்பினர் பட்டியல் வெளியிடாமல், தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நடத்தப்பட்ட தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுக்குழு கூட்டம் அறிவிப்பது தவறு என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்.. ஆனால்... - ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

    இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், ‘பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK