கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் நேற்று கடுமையான வெயில்

கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் நேற்று கடுமையான வெயில்

வெயிலின் தாக்கம்

கடந்த 68 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில், மார்ச் மாதத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கடந்த 68 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில், மார்ச் மாதத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சென்னையில் 68 ஆண்டுகள் இல்லாத வகையில் நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல் மட்ட வெப்பம் காரணமாக வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது. கடலில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து போனதால், தரைப் பகுதியை நோக்கி வீசும் காற்றும் வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படகின்றது.

    சென்னையில் 68 ஆண்டுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் நேற்று 41.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனவும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும்.

    இந்நிலையில், டெல்லியில் குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில், மார்ச் 29 திங்கட்கிழமை, ஹோலி பண்டிகையன்று 40.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் டெலிலியில் கொளுத்தியது.

    Must Read :  இன்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்... 

     

    அதன்படி நஜப்கார், நரேலா, பிதாம்புரா மற்றும் பூசா பகுதிகளில் அதிகபட்சமாக 41 முதல் 42 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகியுள்ளது. இது கடந்த 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் பதிவான மிக அதிக வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: