முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனம்: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனம்: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

ஆ.ராசா

ஆ.ராசா

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனத்திற்காக ஆ.ராசா மீது சென்னை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனிடையே ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அ.தி.மு.க சார்பில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனத்திற்காக ஆ.ராசா மீது சென்னை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மு.க. ஸ்டாலின் அறிக்கை:

முன்னதாக தி.மு.க. தலைமையும் இது போன்ற பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அத்தகைய பேச்சுகளை கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

ஆ.ராசா விளக்கம்:

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சியையும் இன்று அவர் பெற்றிருக்கும் இடத்தையும், அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வந்த முறையையும் பெற்றிருக்கும் இடத்தையும் இரண்டையும் ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் சமூகவலைதளத்தில் வந்து கொண்டிருப்பதாக அறிகிறேன். அதுமுற்றிலும் தவறானது. நான் அவரின் தனிப்பட்ட பிறப்பையோ, புகழுக்கோ கலங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். முறையாக படிப்படியாக வளர்ந்து இன்று தலைவராகியிருக்கிறார். நாங்கள் குறுக்கு வழியில் வரவில்லை என்று சொல்வதற்காக. எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியிலே வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்ய நேரிட்டது. உள்நோக்கத்தோடு நான் எதையும் பேசவில்லை. இருவரின் அரசியல் ஆளுமையை குறிப்பிடுவதற்காக அந்த ஒப்பீடு நடந்தது. அதை தவறாக புரிந்துக்கொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்

First published:

Tags: A Raja, ADMK, CM Palanisamy, DMK