தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா? அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதனை அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா? அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம்
அமைச்சர் உதயகுமார்
  • Share this:
சென்னை பட்டாளத்தில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 381-வது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதாவும் தமிழகத்தில் சராசரியாக 252.2 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இது சராசரியான அளவைவிட 28 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருக்கிறத. கடந்த ஆண்டு தமிழக அணையில் நீர் கொள்ளளவு பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையில் நீரின் கொள்ளளவு அதிகமாக கிடைத்திருக்கிறது.

ஆனால் மேட்டூர், பாபநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் அணையில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கொள்ளளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கிறது என தெரிவித்தார்.


மேலும் படிக்க...பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

தற்போது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள் மூடியிருந்தாலும் திருமணங்கள் நடைபெற்று தான் வருகிறது.கொரோனா தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

படிக்க...காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் யார்? இன்று கூடுகிறது உயர்மட்ட காரிய கமிட்டி குழு..

மேலும் இ-பாஸ் முறை ரத்து செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சர் இது குறித்து களஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விக்கு, ”மாவட்டங்களின் வளர்ச்சி முக்கியம். அதனடிப்படையில் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தை குறிப்பிட உரிமை இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக வைக்கும் எந்த கோரிக்கையும் தவறு இல்லை, உரிய நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க...காஷ்மீரில் அமையும் ஈஃபிள் டவரை விட உயரமான ரயில்வே பாலம் - திறப்பு எப்போது?

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து விசரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading