முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் தொடர்புத்துறை வெளியீடு

மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அவரது அலுவலக பணியாளர்களுக்கும் 13.07.2020 அன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கும், அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading