திமுகவுக்கு எதிரான அதிமுகவின் தேர்தல் விளம்பரத்திற்கு தடை!

அதிமுக ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்காளர்களை திசை திருப்புகிறது என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 15, 2019, 8:10 AM IST
திமுகவுக்கு எதிரான அதிமுகவின் தேர்தல் விளம்பரத்திற்கு தடை!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
Web Desk | news18
Updated: April 15, 2019, 8:10 AM IST
ஊடகங்களில் உரிய ஆதாரங்கள் இன்றி திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறி அதிமுகவின் விளம்பரத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தடை விதித்துள்ளார்.

அதிமுக மின்னணு ஊடகம் மற்றும் சமூகவலைதளங்கள் வாயிலாக திமுகவிற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

திமுகவிற்கு எதிராக ஊடங்கங்களில் அதிமுக வெளியிட்ட விளம்பரத்தில் உரிய ஆதாரங்கள் இன்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வாக்காளர்களை திசைதிருப்பும் செயல் எனவும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

திமுகவின் புகார் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அதிமுகவின் விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளார்.

தேர்தல் விதிகளை மீறி எந்த கட்சியும் செயல்படக்கூடாது என அறிவுறுத்தியுள்ள சத்ய பிரதா சாஹூ, உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் பிரசாரம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சிகள் உரிய முன் அனுமதியின்றி விளம்பரங்களை மின்னணு ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Also see... சென்னையில் எம்எல்ஏ-க்கள் விடுதியில் ஐடி ரெய்டு!  

"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுகவினரே காரணம்" - எடப்பாடி பழனிசாமி

Also see... பாரிவேந்தருக்கு அருள்வாக்கு சொன்ன 'மாரியாத்தா'


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...