BREAKING சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Web Desk
Updated: June 14, 2019, 9:49 PM IST
BREAKING சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
சேத்பட் ரயில் நிலையம்
Web Desk
Updated: June 14, 2019, 9:49 PM IST
சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் தேன்மொழி என்ற இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று இரவு சுமார் 8 மணிக்கு, சேத்துப்பட்டு ரயில் நிலைய பிளாட்பாரத்தில், தேன்மொழி (25) என்ற பெண் எழும்பூர் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தேன்மொழியின் தாடையில் அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர் ரயில் முன் பாய்ந்து அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விசாரணையில், தேன்மொழி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், எழும்பூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சேத்துப்பட்டில் பணிபுரிந்து வரும் அவர், பணி முடிந்து விடுதிக்கு செல்லும்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், அந்த இளைஞர் பெயர் சுரேந்தர் என்பதும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...