சென்னை - கணவர் உதவி செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை

சென்னையில் கணவர் தனது பணிகளுக்கு உதவாத நிலையில், அதனால் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்

சென்னை - கணவர் உதவி செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
தற்கொலை செய்த பெண்
  • News18
  • Last Updated: July 31, 2020, 5:31 PM IST
  • Share this:
ஊட்டியை சேர்ந்த ஹரி கணேஷ் (29) மற்றும் பிரிய தர்ஷினி (29) ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரி கணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகவும், பிரிய தர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டு விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த கே.கே நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தே பிரியதர்ஷினி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும் போது கணவர் ஹரிகணேஷிடம், பணியின் காரணமாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.


இதனால் கோபமடைந்த பிரியதர்சினி தனி அறைக்கு உறங்க சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்சினியின் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்த போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.





மேலும் பிரியதர்ஷினி வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இவர் மனஅழுத்தம் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்தில் புதுமணப்பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading