சென்னையில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வறிக்கை

சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் அதிகப்படியான கார்பன் வெளியேற்றமானது வரும் ஆண்டுகளில் சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்டதை விட மிக தீவிரமான மழைக்கு வழிவகுக்கும் என்று தெரியவந்துள்ளது. 

சென்னையில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வறிக்கை
சென்னை வெள்ளம் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: July 2, 2020, 7:52 PM IST
  • Share this:
சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. சென்னையில் இதனால் பலர் மரணமடைந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, சென்னை மீண்டும் தனது இயல்பு நிலைக்கு வருவதற்கு சுமார் ஒரு மாத காலமாயிற்று.

இந்நிலையில், காலநிலை மாற்றம் திட்டத்தின் கீழ் கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான அவசியம் குறித்த சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம் பெற்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்காக SPLICE - காலநிலை மாற்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் 'கடலோர உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை உள்கட்டமைப்பு மீதான தழுவல் உத்திகள்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளும் கடந்த வாரம் வெளியாகும் வெளியிடப்பட்டன.

படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?
படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
இந்த ஆராய்ச்சி இந்தியாவின் குறிப்பிட்ட 4 கடலோர நகரங்களில் நடத்தப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது இருந்த பருவநிலை மாற்றம் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது பசுமை இல்ல வாயுக்கள் அதிக அளவில் தற்போது வெளியேறுவதாகவும், இதன் தாக்கம் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை தொடர்ந்து அதிகரிக்க வைப்பதாகவும் இந்த பருவ நிலை மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழை பொழிவை உண்டாக்கி மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர்கள் ஆராய்ச்சியின் மூலம் கூறுகிறார்கள்.

இதை கட்டுப்படுத்தாவிட்டால்  சென்னையில் ஓரிரு நாட்கள் பெய்யும் கனமழையால் ஏற்படும் பெரும் வெள்ளத்தால் நகரம் பாதிப்படையும் என்றும் அந்த ஆராய்ச்சியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பசுமை இல்லாத வாயு ( கார்பன் ) பயன்பாடு காரணமாக சென்னையில் ' கனமழை பெய்யும் அளவு மற்றும் கன மழையின் தீவிரம் எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். எதிர்காலத்தில் சென்னையில் முன்பு ஏற்பட்டது போன்ற நிகழ்வு ஏற்பட்டால் வெள்ளம் பல நாட்கள் தொடர வாய்ப்புள்ளது. பசுமை இல்லாத வாய் பயன்பாடு அதிகரிப்பது எதிர்காலத்தில் பேரழிவை எதிர்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்' என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது .
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading