விநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்

News18 Tamil
Updated: August 17, 2019, 9:20 PM IST
விநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்
கோப்புப் படம்
News18 Tamil
Updated: August 17, 2019, 9:20 PM IST
விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை நிறுவ ஒற்றைச்சாளர முறையை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

விநாயகர் சிலைகளை நிறுவுபவர்கள் அல்லது நிறுவும் அமைப்புகள் காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி அமைப்புகள் என பல்வேறு துறைகளிடம் இருந்தும் முறையாக அனுமதி பெறப்பட வேண்டி இருந்தது.

இதனால், சிலைகளை நிறுவுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கும், இன்னலுக்கும் ஆளாகினர்.


இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒற்றை சாளர முறையை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை பெருநகர காவல்துறை நியமித்திருக்கிறது

இவ்வாறு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளை, விநாயகர் சிலைகளை நிறுவுபவர்கள் சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனவும், அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதிகளை பெற்று சிலைகளை நிறுவுபவர்களுக்கு அனுமதி வழங்குவார் என்றும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Loading...

மேலும் இதற்காக ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ள பெருநகர காவல்துறை, ஒற்றை சாளரமுறை மூலம் சிலைகளை நிறுவுபவர்களுக்கோ அல்லது நிறுவும் அமைப்புகளுக்கோ இனி எந்தவித சிரமமோ, தாமதமோ ஏற்படாது எனத்தெரிவித்துள்ளது.
First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...