Home /News /tamil-nadu /

5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோயில் - நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட பொதுமக்கள்

5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோயில் - நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட பொதுமக்கள்

வடபழனி கோவில்

வடபழனி கோவில்

சென்னை வடபழனி முருகன் கோயில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு ஐந்து மாதங்களுக்குப் பின்னர் பொது மக்கள் தரிசனத்திற்காக மீண்டும் இன்று திறக்கப்பட்டது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர், தமிழகத்தில் நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளான தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல், கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்தல், உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் கோவில் உள்ளே முறையாக பின்பற்றப்படுகிறது.

    அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு 150 டோக்கங்கள் வீதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.



    மேலும் கிருத்திகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் 900 பேர் வரை தரிசன டோக்கன்கள் விநியோகிக்கவும். ஆன்லைன் முறையில் தரிசன நேரம் ஒதுக்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.



    கடந்த 5 மாதங்களாக எந்தவொரு விஷேசத்திற்கும் கோவிலுக்கு செல்ல முடியாமல் இருந்தது வருத்தம் அளித்ததாகவும், இன்று கோவில் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.



    மேலும் படிக்க... வெறுப்பு பதிவுகள் விவகாரம் - நாடாளுமன்ற நிலைக்குழு முன் பேஸ்புக் அதிகாரிகள் இன்று ஆஜர்

    மேலும் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Hindu Temple, Murugan Statue

    அடுத்த செய்தி