• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செருப்பு, ஷூக்களை குறிவைத்து திருடும் மர்ம கும்பல் - ஒரே பகுதியில் அடுக்கடுக்கான செருப்புகள் திருட்டு

செருப்பு, ஷூக்களை குறிவைத்து திருடும் மர்ம கும்பல் - ஒரே பகுதியில் அடுக்கடுக்கான செருப்புகள் திருட்டு

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

பணம், நகை, இருசக்கர வாகனங்கள், செல்போன் ஆகியவற்றை குறிவைத்து திருடுவது போல செருப்புகளை மட்டுமே குறிவைத்து திருடும் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை சூளை பகுதியில் உள்ள வங்கியில் கேஷியராக பணிபுரிந்துவரும் சந்தானம் என்பவர், அப்பகுதியில் உள்ள வெங்கடாசலம் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த செவ்வாய் கிழமை இவரது வீட்டில் உள்ள ஷூ  ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி புதிய செருப்புகள் மற்றும் ஷூக்கள்  காணாமல் போயுள்ளது. இதனால் இவரது குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் மாலை 4 மணி அளவில் வீட்டுக்குள் வந்து ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி புதிய செருப்பு மற்றும் ஷூக்களை திருடி பாலீத்தீன் பைகளில் போட்டு எடுத்து செல்வது தெரியவந்தது.

ஏற்கனவே இரண்டு முறை இவரது வீட்டில் இதுபோல புதிய ஷூக்கள் மற்றும் செருப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், இந்த முறை, இந்த சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். குறிப்பாக கடந்த 2 மாதங்களில் வெங்கடாசலம் தெரு, பேக்கர்ஸ் சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தொடர்ச்சியாக செருப்பு மற்றும் ஷூக்களை திருடி செல்லும் சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் வேப்பேரி, பெரியமேடு ஆகிய பகுதிகள் செருப்பு கடைகளுக்கு பிரசித்தி பெற்றவை என்பதால், புதிய செருப்புகளை திருடி அப்பகுதிகளில் சில கடைகளில் விற்று அதன்மூலம் திருடர்கள் சம்பாதித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செருப்பு மற்றும் ஷூக்களை திருடி வருவது ஒரே நபரா? அல்லது ஒரு கும்பலாக இவர்கள் செயல்படுகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: