குப்பையை எடுக்கத் தெரியாதா? எனக் கூறி தூய்மைப் பணியாளரை சாக்கடைக்குள் தள்ளி அடித்து உதைத்த குடும்பத்தினர்..!

குப்பையை எடுக்கத் தெரியாதா? எனக் கூறி தூய்மைப் பணியாளரை சாக்கடைக்குள் தள்ளி அடித்து உதைத்த குடும்பத்தினர்..!
  • News18
  • Last Updated: March 25, 2020, 5:37 PM IST
  • Share this:
சென்னையில் தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என தூய்மை பணிப் பெண்களை அடித்து உதைத்து சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த தூய்மை பணியாளர் பெண்மணியிடம் தங்கள் வீட்டின் முன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி சண்டையிட்டு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த பெண்மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தூய்மை பணிப்பெண் ஒருவரை சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்து அவர்கள் ஆடைகளை கிழித்து எறிந்தனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர் பெண்ணை மீட்டனர். ”தெருவை சுத்தம் செய்ய தெரிகிறது என் வீட்டின் முன்னால் இருக்கும் குப்பையை எடுக்க தெரியாதா?” எனக் கூறி, பணிப்பெண்ணை வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரின் கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது.


மேலும், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என அந்த தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை எச்சரிக்கை விடுக்கிறார். இந்த சம்பவம் அங்குள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading