சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்

வடகிழக்குப் பருவமழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்
கோப்புப் படம்
  • Share this:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2015 ஆம் ஆண்டு 306 நீர் தேங்கும் பகுதிகள் இருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு அது 205 இடங்களாகவும், 2018 ஆம் ஆண்டு 53 இடங்களாகவும், 2019 ஆம் ஆண்டு 19 இடங்களாகவும் குறைக்கப்பட்டு, தற்போது 3 இடங்கள் மட்டுமே உள்ளதாக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மாநகராட்சி அறிவித்தது.

ஆனால், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி மாலை பெய்த மழையில் சென்னையின் பல பிரதான சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் கூட தண்ணீர் தேங்கி நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதற்கு காரணம், மழைநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை அகற்றாததே என்று தெரிவித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி இன்னும் முழுமையாக தயாரகவில்லை என்ற விமர்சனத்தை முன் வைக்கிறார்.


மேலும் படிக்க... கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு 1,000 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், சென்னையின் தட்டமான தள அமைப்பு காரணமாக பொதுவாகவே மழைநீர் வேகமாக வடியாது என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவிக்கிறார்.கோடை காலத்தில் வறட்சியும், மழை காலத்தில் வெள்ளமும் சென்னையின் அடையாளமாகவே மாறிவிட்டதற்கு காரணம், முறையான நீராதார கட்டமைப்புகளை உருவாக்காததே என்கின்றனர் ஆய்வாளர்கள். இனிவரும் காலங்களில் இந்நிலை தொடராமல் இருக்க சென்னை மாநகராட்சி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading