கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவுக் கரம்.. நெகிழ வைக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சேவை

படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்க மறுப்பதால், மருத்துவமனையிலேயே அவர்களைத் தங்கவைத்து பராமரித்து வருவதாக மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவிக்கிறார்.

கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவுக் கரம்.. நெகிழ வைக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சேவை
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
  • Share this:
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுடன், ஆண்டுக்கணக்கில் பராமரித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அளப்பரிய சேவையை செய்து வருகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆதரவற்ற சுமார் 30 பேர், பல்வேறு நோய்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், படுத்த படுக்கையாக 6 ஆண்களும் 4 பெண்களும் உள்ளனர். குடும்பத்தார், நண்பர்களே கைவிட்ட நிலையில், மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றியதுடன், அவர்களுக்கு உணவளிப்பது, சவரம் செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்கி ஆதரவு கரம் நீட்டி வருகிறது.

படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்க மறுப்பதால், மருத்துவமனையிலேயே அவர்களைத் தங்கவைத்து பராமரித்து வருவதாக மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவிக்கிறார். நோயாளிகளிடம் முகம் சுழிக்காமல் பணிவிடை செய்வதால் தன்னை மகன், பேரன் போல பாவித்து வருவதாக வார்டு பாய் கவுரி சங்கர் நெகிழ்ச்சிப்படக் கூறுகிறார்.


Also read: நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி.. . காவல்நிலையத்தில் யூடியூப் சேனல் மீது புகார்குடிபோதையில் விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிந்து ஓராண்டாக மருத்துவமனையில் இருந்துவரும் சுப்பு, தனது குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தினர் ஒதுக்கிவைத்து விட்டதாகவும், தற்போது குடிப்பழகத்தைக் கைவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதோடு நிற்காமல் அவர்களுக்கு ஆதரவும் அளித்து வரும் அரசு மருத்தவமனையின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading