முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 22 அடியை நெருங்குகிறது.. கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 22 அடியை நெருங்குகிறது.. கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

Chennai Rain | அடையாறு ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது ஏரியின் மொத்த உயரம் 24 அடியில் 22 அடியை எட்டியதும் உபரி நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய நீர் நிலையாக வானிலை ஆய்வு மையம்அறிவித்தபடி தொடர்ந்து கடந்த 3 நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது இதனால் ஏரியின் மொத்த உயரம் 24 அடியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது 21 .13 அடியே எட்டியது.

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்து தற்போது வினாடிக்கு வெறும் 1086 கன அடி மட்டுமே வருகிறதுஇங்கிருந்து குடிநீருக்காக 68 இந்த நேரடி ஆவியாதல் உடன் சேர்த்து வெளியேற்றப்பட்டு வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் உயிர் கொடுப்பது 20.20 மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

தொடர்ந்துகனமழை நீடிக்கும் பட்சத்தில் ஏரியின் நீர்மட்டம் 22 அடி தொடும்போது பொதுப்பணித்துறையினர் உபரி நீர் திறக்கப்படும் கால்வாய் மற்றும் அடையாள நகரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய அறிவிப்பை வழங்கி மாவட்ட நிர்வாகம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பின்னர் திறந்துவிட முடிவு செய்துள்ளனர் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குன்றத்தூர் நத்தம்திருநீர்மலை திருமுடிவாக்கம் சிறுகளத்தூர் மணப்பாக்கம் உள்ளிட்ட நிலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் தற்போது மழை பொழிவு இல்லை என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் உபரி நீர் திறக்கப்படாத என தெரிவித்துள்ளன.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்று காலை நேர நிலவரப்படி ஏரியின் நீர் மட்ட உயரம் 21.13 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2889 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1086 கன அடியாகவும் உள்ளது.

நேற்று இரவு முதல் மழை இல்லாத காரணத்தால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்ட உயரம் அதிகரிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. சமூக வலை தளங்களில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு விட்டதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சரியான தகவல் அல்ல.

First published:

Tags: Chembarambakkam Lake, Chennai, செம்பரம்பாக்கம்