பிற உயிர்களிடம் அன்பு செலுத்தும் போக்குவரத்து காவலர்.. பலர் பாராட்ட அப்படி என்ன செய்தார்?

  • Share this:
சென்னையில் நடன அசைவுகளால் போக்குவரத்தைச் சீராக்குவதிலும், 10 ஆண்டுகளாக நாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார் போக்குவரத்து காவலர் ஒருவர்.

கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை சாலைகளில், வாளி நிறைய உணவை எடுத்துக்கொண்டு பைக்கில் சென்ற ஒருவர் நின்றதும், அவரை ஏக்கத்துடனும், பசியுடனும் தெருநாய்கள் சூழ்ந்துகொண்டன. நாய்களின் பாச மொழியில் பேசியபடி அவற்றுக்கு உணவளித்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளாக இதனை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ALSO READ : தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ரூ.171 கோடி வருமானம்: மதுவிற்பனையில் இந்த மாவட்டம்தான் முதலிடம்..


சென்னையில் போக்குவரத்து காவலராக உள்ளார் ராஜேஷ். கொரோனா காலத்திலும் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் ராஜேஷ், இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த ஜீவன்களுக்கு நாம் அதிக கருணை காட்ட வேண்டும் என்கிறார்.

ஊரடங்குக்கு முன், உணவகங்களில் மீதமாகும் உணவை நாய்களுக்கு அளித்து வந்த இவர், தற்போது உணவகங்கள் மூடப்பட்டதால், தனது வீட்டிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு வந்து இந்த ஜீவன்களுக்கு வழங்கி வருகிறார். ஓய்வு நேரத்தில் இதை செய்யும் ராஜேஷ், சில நேரங்களில் பணிபுரியும் போது காக்கைகளுக்கும் உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தும் ராஜேஷ், போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் செயலே வித்தியாசமான நடன அசைவாக இருக்கிறது. வித்தியாசமான நேர்த்தி, பழகுவதில் இவர் காட்டும் அன்பையும் பலர் பாராட்டி வருகின்றனர். போக்குவரத்தை ஒழுங்கு செய்வது முதல் பிற உயிர்களிடம் இவர் காட்டும் கருணை என ஒரு போற்றத்தக்க மனிதராக இருக்கிறார் போக்குவரத்து காவலர் ராஜேஷ்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading