காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்திய வாலிபர் - தட்டிக்கேட்ட அண்ணனின் பைக் எரிப்பு

பைக்கை எரித்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஐ.டி.யில் பணிபுரியும் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, அவரின் அண்ணன் பைக்கை எரித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
    சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). நாவலூரில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். சதிஷ்குமாரின் 24 வயதான தங்கை கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
    இந்த நிலையில், அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்த, கறிக்கடையில் பணிப்புரிந்து வரும் தஸ்தகிர் பாட்ஷா (30) என்பவர் சதீஷ்குமாரின் தங்கையை தினமும் பின்தொடர்ந்து வந்து காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இதுகுறித்து சதீஷ்குமாரிடம் அவரது தங்கை தெரிவித்ததால், கடந்த 6ம் தேதி தஸ்தாகீர் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தஸ்தகிர் பாஷா குடிபோதையில் நேற்று இரவு 1.15 மணியளவில் சதிஷ்குமார் வீட்டிற்குள் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

    Also read: சொத்துக்காக மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர் - காவல் ஆணையரிடம் கண்ணீருடன் புகாரளித்த 80 வயது மூதாட்டி

    இதுகுறித்து சதீஷ்குமார் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Rizwan
    First published: