சென்னையில் பண்ணைக் கூட்டுறவு அங்காடிகளில் 30 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை!

சென்னையில் பண்ணைக் கூட்டுறவு அங்காடிகளில் 30 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை!
வெங்காயம்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 7:41 PM IST
  • Share this:
வெளிச் சந்தையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் பெரிய வெங்காயம் சென்னையில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் பசுமை பண்ணை கூட்டுறவு அங்காடிகளில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றன. 

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவீதம் விலைவிக்கப்பட்டு வரும் நிலையில், அண்மையில் பெய்த மழையால் வெங்காயத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டுவருவது தடைபட்டுள்ளது.

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் வெங்காயம் விலை கடந்த ஒருவாரத்தில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.  ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஒரு கிலோ வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் வரைக்கு விற்பனையாகிறது.


சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இன்று 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சின்ன வெங்காயமும் கிலோவிற்கு 15 ரூபாய் உயர்ந்து 55 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் வெளிசந்தைகளில் அதிகப்படியான விலைக்கு விற்கப்படும் வெங்காயம் சென்னையில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் பசுமை பண்ணை கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலைகளில் விற்கப்படுகிறது.

ஆந்திரா வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும், நாசிக் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாசிக் வெங்காயம் ஈரப்பதம் நீக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆந்திரா வெங்காயம் ஈரப்பதத்துடன் விற்கப்படுவதால் அதிகபட்சமாக 3 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Also Watch : காவல்நிலையத்தில் டிக்டாக் பெண் வாக்குமூலம்!

Loading...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...