வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக நேரடியாக புகார் கொடுத்த பொதுமக்கள் - புதிய காவல் ஆணையர் முன்னெடுத்த நடவடிக்கை

வீடியோ கால் மூலமாக சென்னை காவல் ஆணையரிடமே நேரடியாக புகார் மற்றும் குறைகளை கூறும் இந்த நடைமுறையானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக நேரடியாக புகார் கொடுத்த பொதுமக்கள் - புதிய காவல் ஆணையர் முன்னெடுத்த நடவடிக்கை
வீடியோ கால் மூலம், புகார்களை பெற்ற காவல் ஆணையர்
  • Share this:
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனாவினால் பொதுமக்களால் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் இனி பொதுமக்கள் வீடியோ கால் மூலம் தன்னிடம் நேரடியாக பேசி தங்களது குறைகளையும், புகார்களையும் தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை 6369100100 என்ற மொபைல் எண்ணுக்கு வீடியோ கால் செய்து காவல் ஆணையரிடம் தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு வீடியோ கால் மூலம் சென்னை காவல் ஆணையர், பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறிந்தார். அதனடிப்படையில் 34 நபர்கள் வீடியோ கால் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, நிலமோசடி பிரச்சனை, ஈ-பாஸ் மோசடி, காசோலை மோசடி, பொது அமைதிக்கு தொல்லை கொடுத்தல், போன்ற பிரச்சினைகளை கூறினர்.

படிக்க: துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா - இன்று மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி

படிக்க: டிக்-டாக் செயலி தடையால் ₹45,000 கோடி இழப்பு... சீன அரசு ஊடகம் தகவல்
பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறிந்த காவல் ஆணையர், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வீடியோ கால் மூலமாக சென்னை காவல் ஆணையரிடமே நேரடியாக புகார் மற்றும் குறைகளை கூறும் இந்த நடைமுறையானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading