3-வது நாளாக தொடரும் மெட்ரோ ரயில் ஊழியர்களின் போராட்டம்

மெட்ரோ ரயில் ஊழியர்களை போராட்டக் களத்துக்கு தள்ளியிருப்பது கவலை அளிப்பதாகவும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

3-வது நாளாக தொடரும் மெட்ரோ ரயில் ஊழியர்களின் போராட்டம்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: May 1, 2019, 9:32 AM IST
  • Share this:
3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மெட்ரோ ரயில் ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நிரந்தரப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போதே, ஒப்பந்த பணியாளர்களை அதிக சம்பளத்துக்கு பணியமர்த்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரந்தர பணியாளர்கள் 8 பேர் இணைந்து பணியாளர் சங்கம் ஒன்றை தொடங்கினர்.

இதனால் அவர்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை அடுத்து மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் மெட்ரோ ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மெட்ரோ ஊழியர்களுடன் சென்னை குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 6 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், 8 பேர் பணிநீக்கத்தை ரத்து செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், தங்களது போராட்டம் தொடரும் என மெட்ரோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

ஊழியர்களின் போராட்டம் காரணமாக 85 சதவீதம் மெட்ரோ ரயில் சேவை நேற்று இயக்கப்படவில்லை. இதனிடையே, மெட்ரோ ரயில் நிறுவன கட்டுப்பாட்டு அறையில் நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக மெட்ரோ ஊழியர்கள் 18 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக மெட்ரோ ரயில் ஊழியர்களை போராட்டக் களத்துக்கு தள்ளியிருப்பது கவலை அளிப்பதாகவும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர்.

Also see... காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை


Also see... #HappyBirthdayThala | அன்பு... அமைதி... அஜித்...!


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...