சென்னையில் திருடனை பிடிக்கும் ஆர்வத்தில் 2-வது மாடியிலிருந்து குதித்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்

சென்னையில் திருடனை பிடிக்கும் ஆர்வத்தில் 2-வது மாடியிலிருந்து குதித்த நபருக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது.

சென்னையில் திருடனை பிடிக்கும் ஆர்வத்தில் 2-வது மாடியிலிருந்து குதித்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
மாதிரி படம்
  • Share this:
குமரன் நகர் வெங்கடாச்சலம் தெருவில் வசிப்பவர் ராஜா(37). பிளம்பர் வேலை செய்து வரும் இவர் இரண்டு தளங்கள் கொண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். மொட்டைமாடியின் ஒரு பகுதியில் இருக்கும் தனது வீட்டின் கதவை திறந்து வைத்து மாடியில் மற்றொரு பகுதில் இரவு நேரங்களில் உறங்குவது வழக்கம்.

நேற்றிரவு வழக்கம்போல ராஜா உறங்கிக்கொண்டு இருக்கும்போது வீட்டின் பீரோவை யாரோ திறப்பது போல் சத்தம் கேட்கவே வீட்டில் வந்து பார்த்தபோது அங்கு ஒரு திருடன் பீரோவை திறந்து பொருட்களை எடுப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா திருடனுடன் கட்டிப்பிடித்து சண்டை போட்டுள்ளார். அப்போது திருடன் 2 வது மாடியில் இருந்து குதிக்கவே, அவரை பிடிக்கும் வேகத்தில் ராஜாவும் குதித்துள்ளார். இதனால் ராஜாவின் இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் திருடன் தப்பி ஓடி விட்டார்.

Also Read : சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் மகளுக்கு விரைவில் திருமணம்..


தகவலறிந்த குமரன் நகர் காவல்துறையினர் ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக தற்போது ராஜா ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading