தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த இளம்பெண்... காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய இளைஞர்...!

சென்னையில், தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த இளம்பெண்ணை, காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பைக் பஞ்சர் இளம் பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி?

  • News18
  • Last Updated: August 11, 2020, 12:33 PM IST
  • Share this:
சென்னை மதுரவாயலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கு திங்கட்கிழமை வயிற்று வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாகவும் சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளனர். சற்று நேரத்தில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்தது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி அடையாமல் அதிர்ச்சி அடைந்ததால் மருத்துவர்கள் குழப்பமடைந்தனர்.  அப்போதுதான் இளம் பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என தெரிய வந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரவாயல் போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு சென்று இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை அடுத்த புழலைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கி விட்டு, கைவிட்டு சென்றதாக தெரிவித்தார்.


லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் லோகேஷ்க்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி உள்ளார்.

கடந்த ஆண்டு பணி நிமித்தமாக மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்த போது அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகியுள்ளது. வெயிலின் உச்சத்தில் பஞ்சர் ஆன இருசக்கர வாகனத்துடன் நின்றவர், சாலை ஓரத்தில் இருந்த வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

பார்க்க அழகாக இருந்த அந்த பெண் மீது காதல் வயப்பட்ட லோகேஷ், தனது போன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த பெண் எப்படியும் அழைப்பார் என ஒரு வாரம் லோகேஷ் காத்திருந்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் விட்டதால், மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று தண்ணீர் கேட்பதுபோல் அந்த பெண்ணிடம் பேசியுள்ளார்.திரும்பத் திரும்ப அந்த பெண்ணை பல்வேறு இடங்களில் சந்தித்து தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று லோகேஷ் தனிமையில் இருந்துள்ளார்.

இதில் கர்ப்பமான அந்த பெண்ணிடம் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் கர்ப்பத்தை கலைக்காத அவர், வயிற்றில் நீர் கட்டி இருப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிகிச்சை பெற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து லோகேஷை கைது செய்த மதுரவாயல் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading