சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு..  கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 9:44 AM IST
  • Share this:
நாளை கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதால் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை மூடப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி கோயம்பேடு சந்தை அடைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, பூந்தமல்லி அருகேயுள்ள திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டது.

திருமழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், மழை நேரத்தில் அங்கு சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

மேலும் படிக்க...சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..


இந்த நிலையில், நாளை கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்படுவதால், திருமழிசை சந்தை மூடப்பட்டது. திருமழிசையிலிருந்து விடைபெறும் வியாபாரிகள், கேக் வெட்டி மகிழ்ந்தனர். கோயம்பேடு சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading