காவலர் தேர்வை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

காவலர் தேர்வை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சென்னை உயர்நீதிமன்றம்
  • Share this:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன்கள் உள்ளிட்ட 8,888 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர் தேர்விலும் முறைகேடு நடைபெறுவதால் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என்று நீதிபதி கவலை தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள் என்றும் அனைவரும் எப்படி ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள் என்றும் கேள்வியெழுப்பிய நீதிபதி, தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றது எப்படி எனவும் வினவினார். இதுபோன்று குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் காவலர்களாக பணியாற்றினால் காவல்துறையின் நிலை என்ன ஆவது எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த புகார் தொடர்பாக அரசு தாக்கல் செய்யும் (அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவலர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், இந்த மனு மீது வரும் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


Also See...
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்