அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை சமீபகாலமாக ஆசிரியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜுலை 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்
அங்கன்வாடி மையம்
  • News18
  • Last Updated: July 13, 2019, 10:57 PM IST
  • Share this:
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பியது.

அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 8,000 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சுமதி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அங்கன்வாடி மையங்களுக்கு உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறிய நிலையில், தற்போது தங்களை மாற்றியுள்ளதாக அவர்கள் மனுவில் குற்றம்சாட்டினர்


இந்த வழக்கானது நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விரைவில் உபரி ஆசிரியர்கள் இறுதி செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் விளக்கமளித்தது

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அங்கான்வாடி மையங்களில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடரவேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்

Loading...

அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை சமீபகாலமாக ஆசிரியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜுலை 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also watch: பேருந்தில் லேப்டாப் எடுத்துட்டு போறிங்களா! உஷார்... உங்களைத்தான் தேடுகிறது திருடும் கும்பல்

First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...