கொரோனா நோய் தடுப்பு விதிமீறல்கள்: சென்னையில் 2 கோடி ரூபாய் அபராதம் வசூல்..

ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய வடசென்னை பகுதிகளில் அதிகபட்ச அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு விதிமீறல்கள்: சென்னையில் 2 கோடி ரூபாய் அபராதம் வசூல்..
(மாதிரி படம்)
  • News18
  • Last Updated: September 22, 2020, 1:02 PM IST
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிகளை மீறியதாக இதுவரை சென்னையில் இரண்டு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதிகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசு அவரச சட்டம் பிறப்பித்தது.

இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூபாய் 500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூபாய் 200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூபாய் 500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூபாய் 5000, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 50,000 பேரிடம் ரூபாய் 1.50 கோடி அபராதமாக வசூலிக்கப்படடுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 3.97 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முகக்கவசம் அணியாதோரிடம் தான் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு அடுத்தபடியாக நோய்த் தடுப்பு விதிகளை மீறிய கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Also read... நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்ற அறக்கட்டளைசென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 44 லட்சம் ரூபாயும், தண்டையார்பேட்டையில் 27 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள வட சென்னை பகுதிகளில்தான் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது நோய் தொற்று அதிகம் உள்ள கோடம்பாக்கத்தில் 17 லட்சம் ரூபாயும், அண்ணா நகரில் 14 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 1.32 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading