Home » News » Tamil-nadu » CHENNAI CHENNAI FOLKLORE MUSICIANS SUFFERS DUE TO CORONA LOCKDOWN RIZ PAND

ஆடி மாத திருவிழா முன்பதிவு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள உடுக்கை பம்பை இசைக் கலைஞர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மாத திருவிழா முன்பதிவு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் சென்னை உடுக்கை பம்பை இசை கலைஞர்கள்.

ஆடி மாத திருவிழா முன்பதிவு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள உடுக்கை பம்பை இசைக் கலைஞர்கள்
உடுக்கை பம்பை இசைக் கலைஞர்கள்.
  • Share this:
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு காலத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறும். அங்கே எது இருக்கிறதோ இல்லையோ இசைக்குழு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது. அதிலும் குறிப்பாக சென்னையைப் பொருத்தவரை உடுக்கை பம்பை கலைஞர்களின் நிகழ்ச்சி மிக முக்கியமானதாக அங்கம் வகிக்கும். அந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Also read: PUBG கேம் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை

இது குறித்து நம்மிடம் பேசிய கலைக் குழுவின் தலைவர் அய்யனார், எங்கள் தாத்தா பாட்டன் காலத்திலிருந்து இந்தக் கலையை மட்டும் நம்பியிருக்கின்றோம்.


தற்போது இந்த கொரோனாவால் எங்களின் வாழ்வாதாரமே முற்றிலுமாக சிதைந்திருக்கிறது. ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து 10 வாரங்கள் நிகழ்ச்சிக்கான புக்கிங் இருக்கும். ஆனால் தற்போது ஆடி மாதம் பிறந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் ஒருவர் கூட இல்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார்.

மேலும், சென்னையில் மட்டும் இந்தக் கலையை நம்பி பல்வேறு பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் அரசின் உதவியின்றி அல்லல்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading