கொரோனா பாதிப்பால் 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்ததாகத் தகவல்: கணக்கெடுப்பு நடத்த சென்னை மாநகராட்சி உத்தரவு..

சென்னை மாநகராட்சியில் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டு 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா பாதிப்பால் 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்ததாகத் தகவல்: கணக்கெடுப்பு நடத்த சென்னை மாநகராட்சி உத்தரவு..
தூய்மைப் பணியாளர்கள்
  • Share this:
சென்னை மாநகராட்சியில் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டு 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்பத்த மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களாக இருப்பதால் அவர்களை கணக்கில் சேர்க்கவில்லை என்றும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் எத்தனை பணியாளர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதில் பணியாளர்  எண், பதவி, துறை, வயது,  பாலினம், ஆய்வகத்தின் பெயர், தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் , சிகிச்சை பெற்றுவரும் மருந்துவனை உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து மண்டல அலுவலர்களும் தகவல்களை சேகரித்து மாநகராட்சிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading