டெங்கு தடுப்புவிதிகள் மீறினால் அபராதம்... சென்னை மாநகராட்சி உத்தரவு..

டெங்கு தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் பூச்சி இயல் வல்லுனர்கள் உடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

டெங்கு தடுப்புவிதிகள் மீறினால் அபராதம்...  சென்னை மாநகராட்சி உத்தரவு..
dengue prevention
  • Share this:
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் பூச்சி இயல் வல்லுனர்கள் உடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில், ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் செலவிலேயே ஆண்டிபாடி (anti body) பரிசோதனை மேற்கொள்ள நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது.

மேலும், டெங்கு தடுப்பு தொடர்பாக பல வழிகாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது வீடுகளில் இருக்கும் பொதுமக்களிடம் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்.


சுகாதாரம் இல்லாத கட்டிடங்கள், காலி இடங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். மீறினால் அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சுகாதாரம் இல்லாத காலி இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று பலகை வைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை, குடிசை பகுதிகளை கண்டறிந்து கொசு உற்பத்தியை தடுக்க, கிருமி நாசினி, கொசு மருந்து அடுத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading