ஒரே நாளில் 70 இடங்கள் அதிகரிப்பு... சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் நிலை என்ன? - முழு விபரம்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 312 இடங்களை கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளாக அறிவித்து சென்னை மாநகராட்சி தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

ஒரே நாளில் 70 இடங்கள் அதிகரிப்பு... சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் நிலை என்ன? - முழு விபரம்
கோப்பு படம்
  • Share this:
சென்னையில் இதுவரை 23,298 நபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11,265 நபர் குணமடைந்து உள்ள நிலையில், 11,437 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 223 நபர்கள் உயிரிழந்து உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடு, தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை முழுமையாக சென்னை மாநகராட்சி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தி, பரிசோதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.


இந்த கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் பரவலின் தீவிரம், குணமடைவோர் நிலவரத்தை பொறுத்து பகுதிகளின் எண்ணிக்கையை அவ்வபோது தளர்த்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,149 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று வரை 242 ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 70 இடங்கள் அதிகரித்து 312 இடங்களாக உள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 இடங்களும், கோடம்பாக்கத்தில் 73 இடங்களும், திருவிக நகரில் 23 இடங்களும், பெருங்குடி மற்றும் மாதவரத்தில் 20 இடங்களும், அம்பத்தூரில் 19 இடங்களும், சோழிங்கநல்லூரில் 17 இடங்களும், திருவொற்றியூரில் 14 இடங்களும், அடையாரில் 13 இடங்களும் உள்ளன.மேலும்,தேனாம்பேட்டையில் 10 இடங்களும், மணலியில் 9 இடங்களும், தண்டையார்பேட்டையில் 8 இடங்களும், ஆலந்தூரில் 7 இடங்களும், வளசரவாக்கத்தில் 1 இடமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இதில் அண்ணாநகர் மண்டலத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை.

மண்டலம் வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட 312 பகுதிகளின் விபரங்கள் :

மண்டலம் - வார்டு எண்:

திருவொற்றியூர்  - 1,2,3,5,6,7,10,11,13

மணலி - 15,16,18,19,21

மாதவரம் - 22,23,24,25,26,27,29,31

தண்டையார்பேட்டை - 34,39,40,44,47,48

ராயபுரம் - 49,50,52,53,54,55,56,57,58,59,60,61,62,63

திருவிக நகர் - 64,65,66,67,68,69,70,71,73,74,77

அம்பத்தூர் - 79,82,82,83,84,89,90,91,92,93

தேனாம்பேட்டை - 109,111,112,114,115,118,119,120,121

கோடம்பாக்கம் - 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 137, 139, 139, 140, 141, 142

வளசரவாக்கம் - 145

ஆலந்தூர் - 161,163,165,166

அடையாறு -  170,172,173,175,177,178,181,183

பெருங்குடி - 169,183,184,185,186,187,188,191,192

சோழிங்கநல்லூர் - 193,195,197,198,200

Also read... புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவுAlso see...
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading