சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், ஆபத்து குறையவில்லை - மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?

பி சி ஆர் பாசிடிவ் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்று விகிதம் குறைந்து வந்தாலும், பி சி ஆர் நெகடிவ் என வந்து கொரோனா சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை முழுவதும் தெரிய வந்தால்தான் கொரோனா நோய் பரவல் உண்மையில் எவ்வளவு உள்ளது என தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர் அமலோற்பாவநாதன் கூறுகிறார்.

சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், ஆபத்து குறையவில்லை - மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைவாக தெரிந்தாலும், ஆபத்து குறையவில்லை என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.

ஒவ்வொரு நாள் மாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் புதிய கொரோனா தொற்று மற்றும் பரிசோதனைகளின் எண்ணிக்கை வெளியாகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா சென்னையின் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கொரோனா பரிசோதனை ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் சி.டி.ஸ்கேன் என இரண்டு வழிகளில் உறுதி செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தினமும் வெளியிடப்படும் எண்கள் ஆர்.டி.பி.சி.ஆர் எனப்படும் ஆய்வக பரிசோதனை விபரங்களே ஆகும். ஆய்வக பரிசோதனையில் நோய் இல்லை என காட்டினாலும், சி.டி.ஸ்கேன் மூலம் நோய் தாக்குதல் அறியவரும் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கிறது.


பி சி ஆர் நெகடிவ் கொரோனா நோயாளிகள் அதிகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 701 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இதில் 330 பேருக்கு மட்டுமே பி சி ஆர் பாசிடிவ் முடிவு வந்துள்ளது. 371 பேருக்கு பி சி ஆர் நெகடிவ் என வந்துள்ளது. ஆனால் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இருப்பதால் அவர்களும் கொரோனா நோயாளிகளே என்றும் கொரோனாவுக்கான சிகிச்சையே அவர்களுக்கும் வழங்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பி சி ஆர் பாசிடிவ் கொரோனா நோயாளிகளை விட நெகடிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கொரோனா சிகிச்சைப் பொறுப்பு மருத்துவர் ராகவேந்தர் தெரிவிக்கையில், ஒரு நாளில் செய்யப்படும் மொத்த பரிசோதனைகளில், நூற்றில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று தெரியவருகிறது என்பதைத்தான் தொற்று விகிதமாக குறிப்பிடுகிறோம்.சென்னையில் கடந்த சில நாட்களில் தொற்று விகிதம் குறைந்து வருகிறது. அக்டோபர் மாதம் 2ம் தேதி அதிகபட்சமாக 10.44% ஆக தொற்று விகிதம் இருந்தது. அதன் பின் தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என கூறியுள்ளார்.

அட்டவணை:

தேதி பரிசோதனை தொற்று விகிதம்
அக்டோபர் 17 13353 8.47%
அக்டோபர் 16 13365 8.52%
அக்டோபர் 15 13688 8.38%
அக்டோபர் 14 13548 8.34%
அக்டோபர் 13 13198 8.81%
அக்டோபர் 12 13125 9.23%
அக்டோபர் 11 13807 9.05%
அக்டோபர் 10 13416 9.48%
அக்டோபர் 09 13925 9.24%
அக்டோபர் 08 13565 9.54%
அக்டோபர் 07 14125 9.69%
அக்டோபர் 06 13775 9.48%
அக்டோபர்05 13925 9.81%
அக்டோபர் 04 13526 9.96%
அக்டோபர் 03 13700 9.95%
அக்டோபர் 02 12230 10.44%
அக்டோபர் 01 13135 9.81%

 


செப்டம்பர். 25 13100 9.1%
செப்டம்பர் 20 11700 8.51%
செப்டம்பர் 15 12310 8.03%பி சி ஆர் பாசிடிவ் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்று விகிதம் குறைந்து வந்தாலும், பி சி ஆர் நெகடிவ் என வந்து கொரோனா சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை முழுவதும் தெரிய வந்தால் தான் கொரோனா நோய் பரவல் உண்மையில் எவ்வளவு உள்ளது என தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர் அமலோற்பாவநாதன் கூறுகிறார்.
First published: October 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading