56 இடங்கள் மட்டுமே.. சென்னையில் நோய்கட்டுப்பாட்டுப் பகுதிகள் எந்தெந்த மண்டலங்களில் உள்ளன?

சென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி குறைத்துக்கொண்டே வருகிறது.

56 இடங்கள் மட்டுமே.. சென்னையில் நோய்கட்டுப்பாட்டுப் பகுதிகள் எந்தெந்த மண்டலங்களில் உள்ளன?
(Image: Chennai Corporation)
  • Share this:
சென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி குறைத்துக்கொண்டே வருகிறது.

சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக தற்போது அறிவிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

200-க்கும் மேல் இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 56-ஆக உள்ளது. இந்த 56 பகுதிகளும் 6 மண்டலங்களில் மட்டுமே உள்ளது.


சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 18 பகுதிகளும், அம்பத்தூரில் 17 பகுதிகளும், அண்ணா நகரில் 16 பகுதிகளும், தேனாம்பேட்டையில் 3 கட்டுப்பாட்டு பகுதிகளும், வளசரவாக்கம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்தில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதியும் உள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அடையாறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 9 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading