வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
தலைமைச் செயலாளர் சண்முகம்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 7:16 AM IST
  • Share this:
தமிழகத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தயாராகும் விதமாக அனைத்துத் துறை அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமை செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், வட கிழக்கு பருவமழையின் போது அதிகம் மழை பெய்யக்கூடிய இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க...தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம்: இந்தி பேசக் கூடியவர்கள் 66% தேர்ச்சி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது - சு.வெங்கடேசன்


மேலும் மழை, வெள்ளம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வது, தூர்வார வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்கான பாதைகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading